சந்திரயான் லேண்டர் சுற்றுப்பாதை 2-ஆவது முறையாக வெற்றிகரமாக குறைப்பு

சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். 
சந்திரயான் லேண்டர் சுற்றுப்பாதை 2-ஆவது முறையாக வெற்றிகரமாக குறைப்பு

சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். 

பிரித்துவிடப்பட்ட லேண்டர் விக்ரம்  நிலவை சுற்றி வரும் பாதையை குறைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் (இஸ்ரோ) வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.

இந்நிலையில், லேண்டரின் சுற்றுப்பாதையை 2-ஆவது மேலும் குறைக்கும் முயற்சியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி புதன்கிழமை அதிகாலை 3:42 மணியளவில் வெற்றிகரமாக மேற்கொண்டனர். 

இதையடுத்து செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில், அதை தரையிறக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com