காந்தேரி நீர்மூழ்கிக் கப்பல்: செப்.28-இல் கடற்படையில் இணைப்பு
காந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் வரும் 28-ஆம் தேதி இணைக்கப்படுகிறது. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த கப்பலை கடற்படையிடம்


காந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் வரும் 28-ஆம் தேதி இணைக்கப்படுகிறது. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த கப்பலை கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்க இருக்கிறார்.
இது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பலாகும். இந்திய கடற்படையில் இடம் பெறும் இரண்டாவது ஸ்கார்பீயன் நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். முன்னதாக, கடந்த 2017-ஆம் முதல் பிரதமர் நரேந்திர மோடி, ஐஎன்எஸ் கல்வாரி என்ற பெயரிலான முதல் ஸ்கார்ப்பீயன் ரக கப்பலை கடற்படையிடம் ஒப்படைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கடற்படை துணை அட்மிரல் ஜி.அசோக் குமார் இது தொடர்பாக கூறியதாவது: காந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 2017 ஜனவரி முதல் தொடர்ந்து பல்வேறு பயிற்சி மற்றும் பரிசோதனை ஓட்டங்களை மேற்கொண்டுள்ளது. வெற்றி பெற்றதையடுத்து வரும் 28-ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இக்கப்பலை கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்க இருக்கிறார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அந்நாட்டு தொழில்நுட்பத்துடன் மும்பையில் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு முதல் நீர்மூழ்கிக் கப்பலான கல்வாரி கடந்த 2017-ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. இப்போது 2-ஆவது கப்பல் இணைக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து கப்பல்களும் கட்டி முடிக்கப்பட்டு விடும். இப்போது இத்திட்டத்தின் மதிப்பு ரூ.25,000 கோடியாகும்.
காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலில் நீருக்குள் செலுத்தும் ஏவுகணைகளும், நீருக்குள் இருந்து நீருக்கு வெளியே உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளும் உள்ளன. இதன் மூலம் எதிரிகளின் கப்பல்கள் எதுவாக இருந்தாலும் அவற்றின் மீது இந்த நீர்மூழ்கிக் கப்பலால் தாக்குதல் நடத்த முடியும். இதனைக் கட்டமைப்பதில் பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் இந்தக் கப்பலைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தன. இப்போது, இந்தியாவில் உள்ள பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் கடற்படைக்காக 51 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...