இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவரை, அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதியளித்தது தேர்தல் விதிமுறைகளை மீறல் ஆகாதா என கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தலில் கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட சின்னம் தானே முக்கியப் பங்கு வகிக்கிறது. வாக்காளர்களான பொது மக்களும் சின்னத்தைப் பார்த்துதான் வாக்களிக்கின்றனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. ஆனால் எப்படி போட்டியிடுகிறோம் என்பது முக்கியம் என கருத்து தெரிவித்தனர்.