இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் 13 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தை ஒட்டியுள்ள இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 13.72 கிலோ போதைப் பொருள்களை அம்மாநில போலீஸார் செவ்வாய்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னதாக, செப். 13-ஆம் தேதி 7.5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்ஷீர் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் இருந்து ரூ.28 லட்சம் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் 4 செல்லிடப் பேசிகள் மற்றும் ஒரு மகேந்திரா ஸ்கார்பியோ காரையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் போலீஸார், எல்லையோரப் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் செயல்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...