பெங்களூரு: விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரனின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வுகள் செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரானது, நிலவின் மேற்பரப்பில் தரை இறங்க வேண்டிய தருணத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. அதையடுத்து அதனுடனான தொடர்பினை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறு வந்தது. செப்டம்பர் 21-ஆம் தேதி வரைதான் நிலவின் குறிப்பிட்ட அந்தப்பகுதியில் சூரிய வெளிச்சம் இருக்கும் என்பதால் அதற்குள் ஏதாவது தகவலைப் பெற தீவிர முயற்சிகள் நடந்து வந்தது,
இந்நிலையில் விக்ரம் லேண்டருடனான தொடர்பை கட்டுபாட்டு மையம் இழந்தது ஏன் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில், 'சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது. விக்ரம் லேண்டருடன் தொடர்பை இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய் வெற்றியைக் கொண்டாடிய கேரள ரசிகர்கள்!

நீதிக் கதைகள்! புதிய யோசனை!

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108

நாளை ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்! ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்!
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


