மதத்தின் பேரில் ஒருவரைக் கொல்வது இந்து மதத்தையும், கடவுள் ராமரையும் இழிவுபடுத்துவதாகும்: சசி தரூர் பேச்சு

இந்து மதத்தின் பேரில் ஒருவரை கொல்வது இந்து மதத்தையும், கடவுள் ராமரையும் இழிவுபடுத்துவதாகும் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். 
மதத்தின் பேரில் ஒருவரைக் கொல்வது இந்து மதத்தையும், கடவுள் ராமரையும் இழிவுபடுத்துவதாகும்: சசி தரூர் பேச்சு

இந்து மதத்தின் பேரில் ஒருவரை கொல்வது இந்து மதத்தையும், கடவுள் ராமரையும் இழிவுபடுத்துவதாகும் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் கட்சியின் மூத்தத் தலைவருமான சசி தரூர் மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'நாட்டில் மதத்தின் பேரில் சில வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. தப்ரெஸ் அன்சாரியை 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்ல வைத்து அவரை துன்புறுத்தினார்கள். உண்மையிலேயே இது இந்து மதத்தையும், கடவுள் ராமரையும் இழிவுபடுத்துவதாகும். ஸ்ரீராமர் என்ற பெயரை பயன்படுத்தி மற்றொரு உயிரைக் கொல்வது பாவச் செயல். 

இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திரம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. மதம், மொழி, நிறம் என அனைத்தையும் தாண்டி நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆனால், இந்த ஒற்றுமையில் கடந்த 6 வருடங்களாக ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதை உங்களால காண முடிகிறதா?

பெலுகான் விவகாரம், மாட்டிறைச்சிக்காக வன்முறை என பல சம்பவங்கள் இதற்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்து தர்மம் இதைத் தான் போதிக்கிறதா? நானும் ஒரு இந்து தான். ஆனால், இவர்களைப் போல் அல்ல. 

மகாத்மா காந்தி கூறியது போல, நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு உதவ வேண்டும். 

கேரளாவில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். ஆனால், அவர்களிடையே எந்த வித்தியாசமும் காணப்படுவதில்லை.

மராட்டிய போர் வீரர் மன்னர் சிவாஜி மகாராஜ் கூட தனது ஆட்சியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டிருந்தார். ஆனால், அனைவருக்கும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதனை செய்தும் காட்டினார். 

நாட்டில் மூன்று மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும். அதுவே சிறந்ததாக இருக்கும்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com