கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால், மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பதும், அந்த இரண்டு தொகுதிகள் நீங்கலாக, அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜி நகர், ஹொசபேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.