இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

நிர்பயா குற்றவாளி சீராய்வு மனு தள்ளுபடி

நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாாளியின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2019, 3:21 pm

DIN

நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாாளியின் சீராய்வு மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

நிர்பயா வழக்கில் மரண தண்டனையை உறுதிசெய்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி குற்றவாளி அக்ஷய் குமார் சிங் அளித்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போபண்ணா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தூக்கு தண்டனைக்கு எதிராக நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த இந்த சீராய்வு மனு மீதான விசாரணையை 3 பேர் அடங்கிய அமர்வு புதன்கிழமை மேற்கொண்டது.

இந்நிலையில், குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.