இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

ஏப். 6-ல் வேட்புமனு தாக்கல் செய்கிறார் இபிஎஸ்!

மு.க. ஸ்டாலின், விஜய், சீமான் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏப். 6 -ல் தாக்கல் செய்கிறார்.

News image

எடப்பாடி பழனிசாமி

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 2:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) முதல் நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6 ஆம் தேதி (திங்கள் கிழமை) செய்யவுள்ளார்.

வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் மனுத் தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர்கள் மூவருமே தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.