பாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடித் தாக்குதல்: எதைச் சொல்கிறார் தெரியுமா அமித் ஷா?

அண்டை நாட்டின் மீது நடத்தப்பட்ட மற்றொரு அதிரடித் தாக்குதல் இது என்றும், வழக்கம் போல இதுவும் வெற்றியே என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மீதான மற்றொரு அதிரடித் தாக்குதல்: எதைச் சொல்கிறார் தெரியுமா அமித் ஷா?


புது தில்லி: அண்டை நாட்டின் மீது நடத்தப்பட்ட மற்றொரு அதிரடித் தாக்குதல் இது என்றும், வழக்கம் போல இதுவும் வெற்றியே என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இதுவரை மோதிய போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.  இதற்காக இந்திய கிரிகெட் அணிக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

"டீம் இந்தியா பாகிஸ்தான் மீது மற்றொரு அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளது. வழக்கம் போல இதிலும் வெற்றிதான்.

சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள்.
இந்த வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடி வருகிறார்கள்." என்று அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியை விடவும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் என்றால், இந்தியா மோதுவது பாகிஸ்தானுடன் என்பதால்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.  இந்திய அணி 336/5 ரன்களை குவித்தது.  பின்னர் பாகிஸ்தான் ஆடிய போது, மழை குறுக்கிட்டது.

இதனால், டிஎல்எஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு 30 பந்துகளில் 136 ரன்களை குவிக்க வேண்டும் என கடின இலக்கு பாக். அணிக்கு நிர்ணயிக்கப்பட்டு 212/6 ரன்களை மட்டுமே எடுத்தது.  இந்திய தரப்பில் விஜய் சங்கர், குல்தீப் யாதவ், பாண்டியா ஆகியோர் சிறப்பாக பந்துவீசி பாக். சரிவுக்கு வித்திட்டனர். இந்த வெற்றி மூலம் உலகக் கோப்பையில்  7-ஆவது முறையாக பாகிஸ்தானை வென்றுள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com