உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: சன்னி வக்பு வாரியம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பின் முழு விவரத்தை படித்தபின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: சன்னி வக்பு வாரியம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பின் முழு விவரத்தை படித்தபின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது. 

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து  நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார்.   

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தீர்ப்பிற்கு பின்னர் சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக அனைத்திந்திய இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் சஃபரியாப் ஜிலானி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில் தீர்ப்பு அதிருப்தி அளிப்பதாக இருக்கிறது. அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் கருதக்கூடாது. தீர்ப்பை வைத்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். தீர்ப்பின் முழு விவரத்தை படித்தபின் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com