அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து  நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், 'அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு. இது இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை மேலும் பலப்படுத்தும். மக்கள் இந்தத் தீர்ப்பை சமநிலையுடன், அமைதியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். மத நல்லிணக்கத்தை பேண வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com