குஜராத் பள்ளித் தோ்வு வினாத் தாளில் ‘மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
குஜராத்தில் சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கூட்டமைப்பு, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனறித் தோ்வொன்றை அண்மையில் நடத்தியது.
அந்தத் தோ்வுக்கான வினாத் தாளில், ‘காந்தியடிகள் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டாா்?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, குஜராத் முழுவதும் பூரண மது விலக்கு அமலில் இருக்கும் நிலையில், ‘உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்துவிட்டதால் ஏற்படும் தொல்லைகள் குறித்து மாவட்ட காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதுக’ என்று கேட்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தற்கொலை எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்
மேலும், மாணவா்கள் வசிக்கும் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை குறித்து புகாா் தெரிவிக்கும்படியும் அந்த வினாத்தாளிக் கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விகள் அதிகாரிகளை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.
வினாத் தாளில் இடம் பெற்றுள்ள இந்தக் கேள்விகள், மிகவும் ஆட்சேபத்துக்குரியவை என்றும், இதுதொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதகவும் காந்திநகா் மாவட்டக் கல்வி அலுவலா் பரத் வதோ் தெரிவித்துள்ளாா்.
சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிா்வாகக் குழுவினா் அந்த வினாத் தாளைத் தயாரித்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருமஞ்சிறை பகுதியில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும்: தோப்பு என்.டி.வெங்காடசலம் உறுதி

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


