தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகியுள்ளதைப் பற்றி...

News image

ஸ்ரேயங்கா.

Updated On :19 ஜூன் 2026, 2:57 pm IST

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல், காயம் காரணமாக மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தான் அணியையும், நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறது.

இந்தத் தொடரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற குரூப்-ஏ ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.

அப்போது ஸ்ரேயங்கா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஹீதர் சீகர்ஸ் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது, ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

காயம் தீவிரமாக இருந்ததால், அவர் ஸ்ட்ரெச்சர் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், காயம் தீவிரமாக இருப்பதால், உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஸ்ரேயங்கா பாட்டீல் விலகியுள்ளார்.

ஸ்ரேயங்கா விலகியது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், அவருக்கு மாற்றாக இளம் வீராங்கனை பிரேமா ராவத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 'இந்தியா ஏ' அணியுடன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த பிரேமா ராவத், உடனடியாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற ஆட்டத்தில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

Summary

Shreyanka Patil has been ruled out of the Women's T20 World Cup after injuring her ankle against the Netherlands. India have brought in uncapped leg-spinner Prema Rawat as the replacement for the allrounder.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.