ஆந்திரத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 132 ஆக உயர்வு!
ஆந்திரத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.


ஆந்திரத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,965 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 இல் இருந்து 50 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 335 பேரும், கேரளா 265, தமிழ்நாட்டில் 234 பேரும், கர்நாடகத்தில் 110 பேரும், ராஜஸ்தானில் 108 பேரும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, ஆந்திரத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...