/

ஜம்மு - காஷ்மீரில் மேலும் மூவருக்கு கரோனா உறுதி

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 ஏப்ரல் 2020, 8:48 am

PTI

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேலும் மூவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூரின் நர்சூவிலிருந்து இன்று மேலும் மூன்று பேருக்கு கரோனா நோய்த் தொற்று பரவியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் வெளிநாட்டுப் பயண விவரங்களைச் சேகரித்து வருவதாக மாநில முதன்மை செயலாளர் கன்சால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் காஷ்மீரில் 57 பேரும், ஜம்முவில் 21 பேரும் என மொத்தம் ஜம்மு-காஷ்மீரில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. 
இதனிடையே, காஷ்மீரில் 2 பேர் பலியாகியுள்ளனர். 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.