/

மகாராஷ்டிரத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 891 ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் மேலும் 23 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :7 ஏப்ரல் 2020, 7:58 am

PTI

மும்பை: மகாராஷ்டிரத்தில் மேலும் 23 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. இந்நிலையில், இன்று மட்டும் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.

இதில், மும்பையில் 10, புணேவில் 4, அகமதுநகரில் 3, புல்தானா மற்றும் நாக்பூரிலிருந்து தலா இரண்டு, தானே மற்றும் சாங்லியில் இருந்து தலா ஒன்றும் பதிவாகியுள்ளன.

இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 52 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.