காங்கிரஸ் மூத்த தலைவர் ராம்கிருஷ்ணா திவிவேதி மறைவு: ராகுல் காந்தி இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராம்கிருஷ்ணா திவிவேதி மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் மூத்த தலைவர் ராம்கிருஷ்ணா திவிவேதி மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராம்கிருஷ்ணா திவிவேதி லக்னௌவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார்.
அவருக்கு வயது 88 ஆகும். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், உத்தரப்பிரதேச முன்னாள் உள்துறை அமைச்சரும் இந்திரா காந்தியின் உதவியாளருமான ராம்கிருஷ்ணா திவிவேதி மறைவுச் செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.
இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...