/

உத்தரகண்டில் மேலும் 3 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 40ஆக உயர்வு

உத்தரகண்டில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 1:38 pm

DIN

உத்தரகண்டில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய அரசு தேசிய ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனினும், நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. 

இந்த நிலையில் உத்தரகண்டில் மேலும் 3 பேருக்கு உத்தரகண்டில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டேராடூனில் 20 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் 541 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுள்ளதாகவும், 63,313 பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.