குஜராத்தில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு
குஜராத் மாநிலத்தில் புதிதாக 92 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில்


அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் புதிதாக 92 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 92 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இதுவரை அம்மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 1,021 ஆக உயர்ந்துள்ளது.
பதிவான 92 புதிய வழக்குகளில், அகமதாபாத் (45), சூரத் (14), வதோதரா (9), பருச் (8), நர்மதா (5) வழக்குகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார முதன்மைச் செயலர் ஜெயந்தி ரவி தெரிவித்துள்ளார்.
புதிய வழக்குகள் வெளிவந்துள்ள மற்ற மாவட்டங்களில் பொட்டாட் (3), பஞ்ச்மஹால் (2) மற்றும் ஆனந்த், சோட்டாடேபூர், தஹோத், கேடா மற்றும் மஹிசாகர் ஆகிய இடங்களில் தலா ஒன்று பதிவாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...