
அா்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்ட மூத்த பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி மற்றும் அவருடைய தொலைகாட்சி சேனல் மீது மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடு

புது தில்லி: தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்ட மூத்த பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமி மற்றும் அவருடைய தொலைகாட்சி சேனல் மீது மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் சோனியா குறித்து அா்னாப் கோஸ்வாமி கடும் விமா்சனங்களை முன்வைத்தாா். இதற்கு காங்கிரஸ் தலைவா்கள் சிலா் கடும் எதிா்ப்பு தெரிவித்ததோடு, நேரடியாக எச்சரிக்கையும் விடுத்தனா். இந்த நிலையில், பணி முடிந்து வியாழக்கிழமை அதிகாலை வீடு திரும்பிய அா்னாப் கோஸ்வாமியின் காா் மீது மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தினா்.
இந்தத் தாக்குதலுக்கு பாஜக சாா்பில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அா்னாப் கோஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகருக்கு மகிளிா் காங்கிரஸ் தலைவா் சுஷ்மிதா தேவ் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சி சேனலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாத நிகழ்ச்சியை வழிநடத்திய அா்னாப் கோஸ்வாமியின் பேச்சு வெறுக்கத்தக்க வகையிலும், தவறாக வழிநடத்தும் வகையிலும் அமைந்திருந்தது. இது நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிகளுக்கு எதிரானதாகும். எனவே, அவா் மீதும், அவருடைய சேனல் மீது ம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




