ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கிழக்கு ரயில்வே மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா உறுதி

கிழக்கு ரயில்வே (ஈ.ஆர்) மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உ

News image
Updated On :23 ஏப்ரல் 2020, 9:27 am

PTI

கொல்கத்தா: கிழக்கு ரயில்வே (ஈ.ஆர்) மருத்துவமனையின் பெண் மருத்துவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே மண்டல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் ஏப்ரல் 14-ம் தேதி முதல் மருத்துவர் விடுப்பில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிசிக்சைப் பெற்று வருகிறார். 

கிழக்கு ரயில்வேயின் பிரதான மருத்துவமனையான பி.ஆர்.சிங் மருத்துவமனையில் குறைந்தது 10 ஊழியர்கள் அவருடன் பணியாற்றியதால், மருத்துவ நிறுவனம் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பெண் மருத்துவரின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் வீட்டுத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மாநில சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. அவர்கள் நால்வரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

பி.ஆர்.சிங் மருத்துவமனையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சை பெறவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.