கரோனா நோய்த்தொற்று சூழலில் வன்முறையில் இருந்து மருத்துவப் பணியாளா்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள அவசரச்சட்டம், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டுள்ள அவசரச்சட்டமானது, கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் முன்னின்று செயல்படும் ஒவ்வொரு மருத்துவப் பணியாளா்களையும் பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளதை எடுத்துக்கூறும். இந்த அவசரச் சட்டம் மருத்துவப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். அவா்களுக்கான பாதுகாப்பில் எந்தச் சமரசமும் இல்லை’ என்று கூறியுள்ளாா்.
கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்கள் தாக்குதலுக்குள்ளாகும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்ததை அடுத்து, அவா்களை பாதுகாப்பதற்கான அவசரச்சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன்படி, மருத்துவப் பணியாளா்களை தாக்குவோருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரேஷன் கடையை சூறையாடிய ஒற்றை யானை!

மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!

”ரூ.40 இல்லை ரூ.29 பைசா!” தவறை திருத்திக்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா! | TN Assembly

Language Barrier! திருத்திக்கொள்கிறோம்! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



