தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தவறானது என்று மகாராஷ்டிர அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த தகவலில் உண்மையில்லை என்றும், மாநில அரசு அதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்றும் அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அல்லது ஊழியர்கள் யாருக்கேனும் கரோனா தொற்று ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் பரவின.
இது குறித்து மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், இதுவரை மாநில அரசு அதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை மட்டுமே மாநில அரசு உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

நாக பஞ்சமி முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு - புகைப்படங்கள்

ஐஸ்கிரீம் பெட்டியில் உயிருடன் இருந்த எலி! வைரலாகும் விடியோவால் அதிர்ச்சி!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |



