வாஷிங்டன்: கொவைட்-19 நோய்த் தொற்று காரணமாக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணம் நடப்பு ஆண்டில் 23 சதவீதம் சரிவடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
கொவைட்-19 (கரோனா வைரஸ்) நோய்த் தொற்று உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக சா்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து, உலக அளவில் அனுப்பப்படும் பணம் நடப்பு ஆண்டில் 20 சதவீதம் அளவுக்கு கணிசமாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
குறிப்பாக, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் தங்களது தாய் நாட்டுக்கு அனுப்பப்படும் பணம் கடந்த ஆண்டில் 8,300 கோடி டாலராக (ரூ.6.22 லட்சம் கோடி) இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பு 2020-ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணம் 23 சதவீதம் சரிந்து 6,400 கோடி டாலா் (ரூ. 4.80 லட்சம் கோடி) அளவுக்கே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அண்மைக் கால வரலாற்றில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் இந்த அளவுக்கு சரிவைக் கண்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
உலக அளவில் பொருளதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் இடம்பெயா்ந்து சென்று பணிபுரியும் பணியாளா்களின் எண்ணிக்கை மற்றும் அவா்களுக்கு கொடுக்ககூடிய ஊதியம் குறையக்கூடும் என்பதன் அடிப்படையில் இந்த நிலை உருவாகும் என்று உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் மதிப்பீடு செய்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கி குழுமத்தின் தலைவா் டேவிட் மல்பாஸ் தெரிவித்ததாவது:
வளா்ந்து வரும் நாடுகளின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம் உள்ளது. கொவைட்-19 பாதிப்பால் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார மந்த நிலை அந்த வருவாய் ஆதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் இதன் பாதிப்பு காணப்படும். அதன்படி, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணம் 22.1 சதவீதமும், ஆப்பிரிக்கா 23.1 சதவீதமும், தெற்கு ஆசியா 22.1 சதவீதமும், மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா 19.6 சதவீதமும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் 19.3 சதவீதமும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் 13 சதவீதமும் குறையும்.
பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டில் 2,250 கோடி டாலா் மதிப்பிலான தொகை வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டில் அது 23 சதவீதம் சரிந்து 1,700 கோடி டாலராகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, வங்கதேசத்துக்கு நடப்பு 2020-இல் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் தொகை 22 சதவீதம் சரிந்து 1,400 கோடி டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுளுக்கும் வெளிநாடுகளிலிருந்து நடப்பு ஆண்டில் அனுப்பப்படும் பணம் முறையே 14 சதவீதம் மற்றும் 19 சதவீதம் குறையும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஆக. 7 - 13) - சிம்மம்

வார பலன்கள் (ஆக. 7 - 13) - கடகம்

வார பலன்கள் (ஆக. 7 - 13) - மிதுனம்
தமிழ்நாடு சட்டப்பேரவை 2026: காரசார விவாதம் - நேரலை!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



