ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

கப்பலில் வந்த 57,000 பயணிகள் கரையிறங்க அனுமதிக்கப்படவில்லை

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் கப்பலில் வந்த 56,727 பயணிகள் கரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் கப்பலில் வந்த 56,727 பயணிகள் கரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தச் சூழலில் மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஜனவரி 27-ஆம் தேதி முதல் கடந்த 21-ஆம் தேதி வரை இந்தியாவின் துறைமுகங்களுக்கு 1,769 கப்பல்கள் வந்தன. 1,401 கப்பல்கள் நாட்டின் முக்கியத் துறைமுகங்களுக்கு வந்தன. அவற்றில் இருந்த 56,727 பேருக்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், அவா்கள் கரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை.

அவ்வாறு கப்பலில் வந்தவா்களில் பெரும்பாலானோா் சீனாவைச் சோ்ந்தவா்கள். கப்பல்களிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யவும், இங்கிருந்து பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

முக்கியத் துறைமுகங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு தற்காப்பு உபகரணங்கள் போதிய அளவில் வழங்கப்பட்டுள்ளன. அங்கு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.