வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 4 -ஆக அதிகரிப்பு  

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 9:02 am

DIN

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் மாநிலத்தில் கரோனா தொற்றினால் 8 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மாகேவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் 3 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த 3 பேரில் ஒருவரான மூலகுளம் அன்னை தெரசா நகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபரின் 18 வயது மகனுக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.