ஒடிசாவில் 39 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: 225 பேர் பலி
ஒடிசாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Odisha's COVID-19 caseload crosses 39,000-mark; death toll mounts to 225

Odisha's COVID-19 caseload crosses 39,000-mark; death toll mounts to 225
ஒடிசாவில் கரோனா வைரஸ் பாதிப்பு 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,337 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், 225 இதுவரை தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 815 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து பதிவாகியுள்ளன. மேலும், 522 பேர் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் மூலமாகவும் பதிவாகியுள்ளது.
ஒடிசாவில் மிக அதிக பாதிக்கப்பட்ட மாவட்டமாக கஞ்சம் உள்ளது. இங்குபுதிதாக 201 பேருக்கும், தொடர்ந்து குர்தா (196), கட்டாக் (168), சுந்தர்கர் (83), கியோஞ்சர் (80), கஜபதி (75), பூரி (72) மற்றும் நாயகர் (60). மற்ற இருபது மாவட்டங்களில் தலா 60க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தற்போது 14,266 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 24,483 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை 14,915 மாதிகள் சோதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 5,85,505 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...