2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வந்தே பாரத் திட்டம் தொடரும்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி 

வந்தே பாரத் திட்டம் தொடரும் என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். 

News image
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
Updated On :8 ஆகஸ்ட் 2020, 2:24 pm

DIN

வந்தே பாரத் திட்டம் தொடரும் என மத்திய விமான போக்குவரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். 

கரோனா நோய்த் தொற்று பிரச்னையால் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவைகள் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவா்கள், வெளிநாடுகளில் வேலை இழந்தவா்கள் என பலரும் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இவா்களை அழைத்து வருவதற்காக கடந்த மே 6-ஆம் தேதி முதல் ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் துபையில் இருந்து கோழிக்கோடு வந்த ஏா் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் தரையிறங்கியது. அப்போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்குள்ளானது. ஓடுபாதையைக் கடந்து பள்ளமான பகுதியில் சரிந்ததால் விமானம் இரண்டாக உடைந்தது. 

இந்த விபத்தில் 2 விமானி உள்பட 18 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இன்று கேரளம் விரைந்த மத்திய விமானப் போக்குவரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்தார். 

தொர்ந்து அவர் கூறுகையில், வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால் இத்திட்டம் தொடரும் என்றார்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபையில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்துக்குள்ளானதையடுத்து அத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் வந்தே பாரத் திட்டம் தொடரும் என மத்திய விமான போக்குவரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.