நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: ராணுவ மருத்துவமனை விளக்கம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

News image

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றமில்லை: ராணுவ மருத்துவமனை விளக்கம்

Updated On :15 ஆகஸ்ட் 2020, 7:42 am

DIN

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற டெல்லி ராணுவ மருத்துவமமையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பின் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதுகுறித்து சனிக்கிழமை காலை ராணுவ மருத்துவமனை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

”பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி மூலம் உயிர்வாயு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்” என ராணுவ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.