சரத் பவாரின் வீட்டுப் பணியாளர்கள் 4 பேருக்கு கரோனா
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மும்பை வீட்டில் பணியாற்றும் 4 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சரத் பவாரின் வீட்டுப் பணியாளர்கள் 4 பேருக்கு கரோனா

சரத் பவாரின் வீட்டுப் பணியாளர்கள் 4 பேருக்கு கரோனா
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மும்பை வீட்டில் பணியாற்றும் 4 பணியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் ப்ரீச் காண்டி மருத்துவமனையில் ரேபிட் ஆன்டிஜென் டிடெக்சன் கருவி மூலமாக சரத் பவாருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
சில்வர் ஓக் என்று அழைக்கப்படும் பவாரின் தெற்கு மும்பை வீட்டில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், வீட்டில் சமையல் வேலை செய்பவர் உள்பட 2 பேரும், பாதுகாவலர்கள் 2 பேர் என 4 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சரத் பவாருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், அவர் அடுத்த சில நாள்களுக்கு எங்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில கூட்டுறவுத் துறை அமைச்சரை கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தித்துத் திரும்பியிருக்கிறார் சரத் பவார். இதற்கிடையே அந்த அமைச்சருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...