ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட், ஜேஇஇ தேர்வு ஒத்திவைப்பு இல்லை: உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :17 ஆகஸ்ட் 2020, 11:18 am

DIN

நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்/ ஒத்தி வைக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்று தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கில், மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் என பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெறும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்று, 'தேர்வு குறித்த அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட்டால் அது மாணவர்களின் நலனை பாதிக்கும்' என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.