பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அருணாசல்: 2023-க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய்

அருணாசலில் 2023-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
அருணாசலில் 2023-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்
Updated On :23 ஆகஸ்ட் 2020, 12:39 pm

DIN

புதுதில்லி: அருணாசலில் 2023-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிவித்தார். அதன்படி நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் அருணாசலில் 2023-ஆம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலில் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும், குடிநீரை மலைகளின் மேல்  நிலப்பரப்புகளுக்கு கொண்டுச்செல்வதில் சவால் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அனைத்து நிலப்பரப்பில் உள்ள வீடுகளுக்கும் குடிநீர் சென்றுசேரும் வகையில் மாநில அரசு சார்பில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 2023-ஆம் ஆண்டிற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் மாநிலத்திற்கு சுத்தமான போதிய அளவு  நீர் கிடைப்பதற்கான வாய்ப்பாக உள்ளது என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.