வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தில்லியில் மெட்ரோ சேவையை துவங்க வேண்டும்: கேஜரிவால்

தில்லியில் மெட்ரோ ரயில் சேவையை சோதனை முறையில் மீண்டும் துவங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

News image
முதல்வர் கேஜரிவால்
Updated On :23 ஆகஸ்ட் 2020, 1:15 pm

DIN

தில்லியில் மெட்ரோ ரயில் சேவையை சோதனை முறையில் மீண்டும் துவங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று தில்லியில் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும் தில்லி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கரோனா பரவல் விகிதம் முன்பைவிட குறைந்துள்ளது. 

இதனிடையே தில்லியில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தில்லியில் மெட்ரோ ரயில் சேவையை சோதனை அடிப்படையில் மீண்டும் துவங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''தில்லியில் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது.   இதனால் பொதுமக்கள் பயன் அடையும் வகையில் மெட்ரோ ரயிலேவையை சோதனை அடிப்படையில் செயல்பட மத்திய அனுமதி அளிக்க வேண்டும். இதனை மத்திய அரசு புரிந்துகொள்ளும் என நம்புகிறேன். 

மார்ச் மாத இறுதியில் இருந்து மெட்ரோ சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ நிர்வாகத்திற்கு ரூ.1,300 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்ததில் குடியிருப்புவாசிகளின் பங்கு மிகப்பெரியது.  உலக நாடுகளும், மற்ற மாநிலங்களும் கரோனாவை எதிர்கொண்டது போலவே தில்லி மக்களும் கரோனாவை எதிர்கொண்டனர்'' இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.