சோனியா ராஜிநாமா என்பது பொய்யான தகவல்: ரண்தீப் சுர்ஜேவாலா
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜிநாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜிநாமா செய்ததாக வெளியான தகவல் பொய்யானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிலையில், கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுகள் எழத் தொடங்கியது. சோனியா காந்தியே தலைவராகத் தொடர வேண்டும் என்று சிலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மற்ற சிலர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜிநாமா செய்ததாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சோனியா காந்தி ராஜிநாமா செய்ததாக வெளியான தகவல் பொய் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ரண்தீப் சுர்ஜேவால் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...