அறிவிக்கப்பட்ட தேதிகளில் நீட், ஜேஇஇ தேர்வுகள்: தேர்வு முகமை
ஜேஇஇ (மெயின்), நீட் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


ஜேஇஇ (மெயின்), நீட் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜூலை மாதம் நடைபெறவிருந்த நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 வரை நடைபெறும் என்றும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எனினும், நாட்டில் கரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல மாநிலங்களிலிருந்து குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில், ஏற்கெனவே அறிவித்ததன்படி ஜேஇஇ தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரையும், நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...