ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :26 ஆகஸ்ட் 2020, 7:34 am

DIN

செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறையாததால்  தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தம் காரணமாவே  தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கரோனா தொற்று பரவா வண்ணம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. 

இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நாடு முழுவதும் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. 

ஜேஇஇ தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.