ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தேர்வு: மூன்று மணி நேரத்தில் 4 லட்சம் நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியான நிலையில், முதல் மூன்று மணி நேரத்தில் 4  லட்சத்துக்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

News image
நீட் தேர்வு
Updated On :26 ஆகஸ்ட் 2020, 11:17 am

DIN

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு இன்று வெளியான நிலையில், முதல் மூன்று மணி நேரத்தில் 4  லட்சத்துக்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 

செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் வெளியான முதல் மூன்று மணி நேரத்தில் சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சுமார் 9.53 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ தேர்வுக்கும் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.  https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

கரோனா காலத்தில் நீட் தேர்வு நடத்த எதிர்க்கட்சித் தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.