கனமழை: ஒடிசாவிற்கு சிவப்பு நிற எச்சரிக்கை; தில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
கனமழை காரணமாக ஒடிசாவிற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், தில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


கனமழை காரணமாக ஒடிசாவிற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், தில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே வடக்கு வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில்
சாம்பல்பூர், சுன்பூர், ஜார்சுகுடா, பார்கர், போலங்கிர், கலஹந்தி, சுந்தர்கர், டோக்ரா, அங்குல், கியோஞ்சர், தெங்கனல் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், அடுத்த இரண்டு தினங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தில்லியிலும் கனமழை பெய்யும் என்பதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தில்லியை தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலஙகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...