மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜாருக்கு கரோனா பாதிப்பு

மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜாருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image

MoS Krishan Pal Gurjar tests positive for COVID-19

Updated On :27 ஆகஸ்ட் 2020, 9:21 am

ANI

புது தில்லி: மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜாருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், 

கடந்த  சில நாள்களாக உடல்நிலையில் பிரச்னைகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனையின் படி சிகிச்சை பெற்று வருகிறேன். 

என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் இந்தியில் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், கரோனா பாதிப்பு 33 லட்சத்தை தாண்டியது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 1,023 புதிய இறப்புகளுடன், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 60,472ஐ எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.