மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மிசோரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது

மிசோரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image

29 more COVID-19 cases in Mizoram

Updated On :28 ஆகஸ்ட் 2020, 6:09 am

ANI

மிசோரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

புதிதாக பதிவாகியுள்ள பாதிப்பை தொடர்ந்து மொத்தம் பாதிப்பு 1,003 ஆக அதிகரித்துள்ளதாக அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

தொற்று பாதிக்கப்பட்ட 500 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 503 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 77,266 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,057 பேர் இறந்த நிலையில், ஒட்டுமொத்த எண்ணிக்கை பலி 61,529ஐ எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.