நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்கவும்: சச்சின் பைலட் போராட்டம்
நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தி ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் போராட்டத்தில் ஈடுபட்டார்.


நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வலியுறுத்தி ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் திட்டமிட்டபடி நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில் ராஜஸ்தானில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து துணை முதல்வர் சச்சின் பைலட் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் சச்சின் பைலட் பேசியதாவது, ''மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மாநில அரசுகளின் கருத்துகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்.
கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிப்பில் உச்சத்தை அடைய உள்ளோம். இந்த நிலையில் தேர்வு வைத்தால், தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாணவர்கள் எவ்வாறு செல்ல இயலும்?. தொற்று பரவல் அதிகம் உள்ள இடங்களை தாண்டி மையங்களுக்கு எப்படி மாணவர்கள் அச்சமின்றி வருவார்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.
''இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் அமைப்புகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தில்லி, தமிழகம், ராஜஸ்தான், உத்தராகண்ட், பிகார், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உலகின் பல்வேறு பகுதிகளில் பல முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மாநில அரசுகளின் கோரிக்கையின்படி மாணவர்களின் நலன் கருதி நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்'' இவ்வாறு சச்சின் பைலட் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...