மத்தியப் பிரதேசத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மத்தியப் பிரதேசத்தின் மோக்ரா கிராமத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Madhya Pradesh: Normal life disrupted due to water-logging in Mokhra village

Madhya Pradesh: Normal life disrupted due to water-logging in Mokhra village
மத்தியப் பிரதேசத்தின் மோக்ரா கிராமத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக பெய்து கனமழை காரணமாக சிங்க்பூர் தடுப்பணையின் நீர் மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இப்பகுதியில் கடுமையான நீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக சத்தர்பூரின் மொக்ரா கிராமத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீரால் வயல்களில் உள்ள பயிர்கள் அனைத்து சேதமடைந்துள்ளன. மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, புவனேஷ்வரில் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை இயக்குநர் எச்.ஆர் பிஸ்வாஸ், ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேச துணைப்பிரிவை ஒட்டியுள்ள சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதிக ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...