கோப்புப்படம்
கோப்புப்படம்

சாதி அடிப்படையிலான குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க மகாராஷ்டிரம் முடிவு

​மகாராஷ்டிரத்தில் சாதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.


மகாராஷ்டிரத்தில் சாதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அமைச்சரவைக் கூட்டத்தில் புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, இதுபற்றி தெரிவிக்கையில், "இந்த முடிவு சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து சாதியினர் மத்தியிலும் தேசிய ஒற்றுமையை வளர்க்கும்" என்றார்.

சமூக நீதித் துறை அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே தெரிவிக்கையில், "இந்த புரட்சிகரமான முடிவு மக்களின் பார்வையை மாற்றும். சாதி முறையை படிப்படியாக ஒழிக்க வேண்டும். மதிப்புடன் வாழ அனைவருக்கும் சம உரிமை உண்டு. சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டக் கூடாது" என்றார் அவர்.

மகாராஷ்டிரத்தில் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்களின் சமூகத்தைக் கொண்டே குடியிருப்புப் பகுதிகளின் பெயர்கள் இருந்து வந்தன. அந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு தற்போது பீம் நகர், ஜோதி நகர் போன்ற புதிய பெயர்கள் சூட்டப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com