உ.பி.யில் சாலை விபத்து: 8 பேர் பலி 

உத்தரப் பிரதேசத்தில் காதா தாம் பகுதியில் மணல் லாரி திரும்பும் போது எதிரே வந்த காரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Truck overturns in UP, eight killed
Truck overturns in UP, eight killed

உத்தரப் பிரதேசத்தில் காதா தாம் பகுதியில் மணல் லாரி திரும்பும் போது எதிரே வந்த காரின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 

தேவிகஞ்சில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று ஷாஜாத்பூருக்கு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் அபிநந்தன் சடலங்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததாக தெரிவித்தார். 

மேலும், காரில் பயணித்த இரண்டு சிறுமிகள் காயங்களுடன் வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

விபத்து ஏற்படுத்தி லாரி ஓட்டுநர் தப்பித்துச்சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

இந்த விபத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com