பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

முதல்வரின் வியூகங்களால் புயல் தூளாகி விடும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இயற்கைப் புயலோ, செயற்கைப் புயலோ முதல்வர் வகுக்கும் வியூகங்களில் புயல் தூள் தூளாகி விடும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

News image

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Updated On :4 டிசம்பர் 2020, 7:03 am

இயற்கைப் புயலோ, செயற்கைப் புயலோ முதல்வர் வகுக்கும் வியூகங்களில் புயல் தூள் தூளாகி விடும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 

தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 'நீர் மேலாண்மைத் திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்தியமைக்கு விருது பெற்றுள்ளோம். இயற்கைப் புயலோ, செயற்கைப் புயலோ முதல்வர் வகுக்கும் வியூகங்களில் புயல் தூள் தூளாகி விடும். புரெவி புயல் காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன

தண்ணீர் வருமா என எதிர்பார்த்த மதுரை மக்களின் கண்ணீர் முல்லைப்பெரியாறு திட்டத்தால் துடைக்கப்பட்டுள்ளது.

அம்ரூட் குடிநீர் திட்டத்தால் கடைகோடி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.