ஐ.எம்.ஏ. நிறுவன நிதி மோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்
ஐ.எம்.ஏ. நிறுவன நிதி மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்க்கிற்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.


ஐ.எம்.ஏ. நிறுவன நிதி மோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்க்கிற்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐ.எம்.ஏ. நிறுவன நிதி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் ரோஷன் பெய்க்கை நவ. 22-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே நவ.23 ஆம் தேதி பெங்களூரு, புலிகேசி நகரில் உள்ள ரோஷன் பெய்க் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது, வழக்கு தொடா்பான பல முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவ்வழக்கில் ஜாமீன் கோரி ரோஷன் பெய்க் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பெய்க்கிற்கு இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...