டிசம்பர் 7 முதல் 204 ரயில் சேவைகள்: கொல்கத்தா மெட்ரோவுக்கு பியூஷ் கோயல் பாராட்டு
வரும் திங்கட்கிழமை முதல் கூடுதல் சேவைகளை வழங்கவும், சேவை நேரத்தை நீட்டிக்கவும் கொல்கத்தா மெட்ரோ முடிவெடுத்துள்ளது.


வரும் திங்கட்கிழமை முதல் கூடுதல் சேவைகளை வழங்கவும், சேவை நேரத்தை நீட்டிக்கவும் கொல்கத்தா மெட்ரோ முடிவெடுத்துள்ளது.
கொல்கத்தாவில் தற்போது தினசரி 190 மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வரும் திங்கள்கிழமை முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 204 ரயில் சேவைகளை கொல்கத்த மெட்ரோ இயக்கவுள்ளது.
மேலும், காலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணி வரை தற்போது சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைகளை நீட்டிக்க முடிவெடுத்திருப்பதற்காக கொல்கத்தா மெட்ரோவை மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...