அரசியல் ஆதாயத்திற்காக குமாரசாமி பொய்யுரைக்கிறார்: சித்தராமையா
அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பொய்யுரைத்து வருவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.


அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பொய்யுரைத்து வருவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
குமாரசாமி அவரது பொய்களாலேயே நன்கு மக்களிடம் அறியப்பட்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி என்மீதான நல்லெண்ணத்தை மக்களிடமிருந்து அழித்து விட்டதாக கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று (சனிக்கிழமை) தெரிவித்திருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நான் முதல்வராகியிருப்பேன் என்றும், காங்கிரஸ் உடனான கூட்டணியில் 12 ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்து பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் சித்தராமையா, ''மக்களிடம் குமாரசாமி குறித்து நல்லெண்ணம் இல்லை. குமாரசாமி அவரது பொய்களாலேயே மக்களிடம் நன்கு அறியப்படுகிறார். அரசியல் ஆதாயத்திற்காக அவர் பொய்யுரைக்கிறார்.
நாங்கள் அதிக அளவிலான இடங்களில் வெற்றி பெற்றிருந்தும் குமாரசாமிக்கு 15 மாதங்களாக முதல்வர் பதவியை அளித்தோம். அரசியலில் ஆதாயம் பெறுபவர்கள் யார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...