ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேஜரிவால் இல்லம் முன்பு பாஜகவினர் தொடர் போராட்டம்

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன்பு பாஜக தலைவர்கள், மேயர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூன்றாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

News image
கேஜரிவால் இல்லம் முன்பு பாஜகவினர் போராட்டம்
Updated On :9 டிசம்பர் 2020, 9:42 am

DIN


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன்பு பாஜக தலைவர்கள், மேயர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூன்றாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பாஜக எம்.பி.க்களான மனோஜ் திவாரி மற்றும் கெளதம் காம்பீர் ஆகியோர் இன்று கலந்துகொண்டனர்.

வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு தில்லி மேயர்களான ஜெய்பிரகாஷ், அனாமிகா மிதிலேஷ், நிர்மல் ஜெயின் ஆகியோர், ஏராளமான பெண் கவுன்சிலர்களுடன் கேஜரிவால் இல்லத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நகராட்சி நிர்வாகத்திற்கு விடுவிக்க வேண்டிய ரூ.13,000 கோடியை விடுவிக்க வேண்டும், நகராட்சி நிர்வாக ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி பாஜகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய பாஜக எம்.பி. மனோஜ் திவாரி, முதல்வர் கேஜரிவால் தன்னை சாதாரண மனிதன் என்று அழைத்துக்கொள்கிறார். ஆனால் அவர் சாதாரண மனிதனுக்கு எதிரானவர். அதனால் தான் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க உதவும் ரூ.13,000 கோடியை விடுவிக்காமல் உள்ளார் என்று கூறினார்.

முதல்வர் இதனை உணர்ந்தால் கரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் வழியில் நிலுவைத் தொகையை உடனடியாக அறிவிப்பார் என்று தில்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.